இன்றைய ஹதீஸ் (26.08.2014)

தஹஜ்ஜுத்

அலீ(ரலி) அறிவித்தார்:

நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் என்னிடமும் ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் வந்தார்கள். 'நீங்கள் இருவரும் தொழவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! எங்களின் உயிர்கள் அல்லாஹ்வின் கையிலுள்ளன. அவன் எழுப்பும்போதே நாங்கள் எழ முடியும் என்று கூறினேன். இதை நான் கூறியபோது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள். பின்னர் தம் தொடையில் அடித்து 'மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்' (திருக்குர்ஆன் 18:54) என்று கூறிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள்.

ஸஹீஹுல் புகாரி பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1127

 

ஷைத்தானின் தோழர்கள்!

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடு களைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (2:208)

Read more...

 

உறுதிமொழியை காப்பாற்றுகிறவர் யார்?

சாந்தி மார்க்கம் இஸ்லாத்தில் நுழைபவர் எந்த இடைத்தரகரோ, மதகுருவோ கிளிப்பிள்ளை பாடமாகச் சொல்லித் தருவதை உளப்பூர்வமாக அறியாமல் நாவால் மட்டும் மொழியாமல், சுயமாகத் திட்டமாக விளங்கி, உணர்ந்து மனதார ஏற்று உறுதியாகச் சொல்லும் உறுதிமொழி ‘நிச்சயமாக இறைவனே இல்லை அல்லாஹ்வைத் தவிர என நான் உறுதி கூறுகிறேன்” இன்னும் திடனாக முஹம்மது அல்லாஹ்வின் அடிமையாகவும், தூதராகவும் இருக்கிறார் என நான் உறுதி கூறுகிறேன்” என்பதுதான். இதுவே ஏற்கத்தக்கது.

Read more...

ஜகாத் செலுத்தாதவர்களின் நிலை


உலக மக்கள் கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால் 1421 வருடங்களூக்குமுன் மனிதன் நாகரீகமடையாத அந்தக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம். இன்று இந்த நாகரீகக் காலத்திலும் அதன் நிலை மங்காமல் எந்த மாற்றத்திற்கும் அவசியமில்லை என்று நிலை நாட்டிக்கொண்டிருப்பது அதியசமன்றோ. அது மட்டுமல்ல உலகம் அழியும் வரை மக்கள் கடைபிடிக்க எளிதாகவும் தெளிவாகவும் இருப்பதும் அதிசமன்றோ.

Read more...

கருப்பு நிறம் சிவப்பாக

கறுப்பானவர்கள் கண்ட கண்ட கிரீம்களைத் தடவி அலர்ஜி வரவழைத்துக் கொள்வதைவிட, இயற்கை வழியை மேற்கொண்டு பொலிவு பெறலாம்.

Read more...

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்


ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான “லைலத்துல் கத்ர்” இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

Read more...

Page 1 of 9